BREAKING NEWS

ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் ரயில் மறியல்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

 

இப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மகிளா பிரிவு, சிறுபான்மை பிரிவு, விவசாயிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே ரயில் நிலைய வளாகம் மற்றும் நிலையத்தின் உள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலைய வளாகத்திற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 

இதனால் காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும், ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

 

பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES
TAGS