ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வந்த செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பயன்பாட்டுக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வசதி இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மயக்கவியல் நிபுணருக்கு நிலுவை தொகையான ரூ. 5 லட்சத்தை செலுத்த அரசு தவறி விட்டதால், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இங்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. இதனால் அறுவை சிகிச்சை தேவைப்படும் கர்பிணிகள் ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை சரி வர கவனிப்பதில்லை.
எனவே ஆர். ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் நியமனம் செய்து 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும், மயக்கவியல் நிபுணர்களுக்கான நிலுவை தொகையை வழங்கி அறுவை சிகிச்சைகள் நடைபெற மருத்துவ துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.