BREAKING NEWS

ராஜபாளையம் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையம் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

மான் வேட்டை 5 பேர் கைது; அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுதுப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காட்டுப்பகுதியில், சட்ட விரோதமாக வன விலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பொறுப்பு வனச்சரக அலுவலர் கார்த்திக், சேத்தூர் வனவர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் மலையடிவார பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

 

அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது நாய் பண்ணையில் சோதனை மேற்கொண்ட போது கடமான் இறைச்சி, அதன் எலும்புகள் இருந்தது. மானை வேட்டையாடி அதன் இறைச்சியை தொடர்ந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

 

 

மேலும் நடத்தப்பட்ட சோதனையில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 நாட்டு துப்பாக்கிகள், 23 தோட்டாக்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட 6 ஆயுதங்கள், பேட்டரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

 

கடமானை வேட்டையாடிய நாய் பண்ணை உரிமையாளர் பொன்னையா மகன் இளங்கோ (63), சேத்தூரை சேர்ந்த வெள்ளையன் மகன் பாலு(54), அரிவீரன் மகன் கிருஷ்ணன்(63), வெள்ளையன் மகன் மலையரசன்(50), மாரியப்பன் மகன் பாண்டியராஜன்(48) ஆகிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய இளங்கோ மகன் வேங்கையனை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.

CATEGORIES
TAGS