ராணிபேட்டை; சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது.
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 35. இவர் எம்ஏ, பிஎட் பட்ட படிப்பு முடித்துவிட்டு அவரது வீட்டின் அருகே கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து போலி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த ரகசிய தகவலின் பேரில் போலி டாக்டர் முருகன் என்பவரை சோளிங்கர் அரசு தலைமை மருத்துவர் கருணாகரன் பருவத்தினருக்கு விரைந்து சென்று போலி டாக்டர் முருகனை கையும் களவுமாக பிடித்து மருந்துகளை பறிமுதல் செய்து சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சோளிங்கர் போலீசார் போலி டாக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS குற்றம்சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமம்சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைதுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்போலி டாக்டர் கைதுமுக்கிய செய்திகள்ராணிபேட்டை மாவட்டம்