ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 252 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு , அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 193 பள்ளிகள் அமைந்துள்ளன .
இந்த பள்ளிகளில் 7,688 மாணவர்களும், 7,564 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 252 மாணவர்கள் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
இதில் 167 மாற்று திறனாளிகள் உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 156 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 1 பறக்கும் படையும், அறை கண்காணிப்பாளராக 1,145 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர் .
10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று ( மார்ச் 26 ல்) தொடங்கி ஏப்ரல் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது.
CATEGORIES ராணிப்பேட்டை