ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி வார்டு எண்.4. மணியக்காரர் தெருவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ். பொறியாளர் ருத்ரகோட்டி, வார்டு உறுப்பினர் வினோத் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசியல்கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திதமிழ்நாடுதலைப்பு செய்திகள்புதிய நியாய விலைக்கடை அடிக்கல்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை நகராட்சிராணிப்பேட்டை மாவட்டம்