BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவு!

ராணிப்பேட்டை பணிக்குழு கூட்டம் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

 

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் கணவரை இழந்த பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த பெண் குழந்தை, மனநலம் மற்றும் உடல் குறைபாடுடையோர் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் உதவிகள் பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 

வழக்குப்பதிவு சாம்பியன் பயிற்சியில் பங்கு பெற்ற குழந்தைகளை பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

போக்சோ வழக்குகள் கட்டாயமாக பதிவு செய்து வழக்கு போடுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டும். அரசினர் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆற்காடு ராம கிருஷ்ணா மனவள கலை மன்றத்தின் மூலம் யோகா பயிற்சி வழங்கிட வேண்டும்.

 

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதகள் கிடைக்க பெறாத இருளர் இன குழந்தைகளை பகுதி வாரியாக கண்டறிந்து பட்டியல் தயார் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் குழந்தை திருமணத்தில் மீட்கப்படும் குழந்தைகள் கண்காணிப்புகள் குறித்தும், மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் கண்காணிப்புகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

 

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, மாவட்ட குழந்தைகள் நலக் குழும தலைவர் வேதநாயகம், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS