BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,
ஆற்காடு அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை பலமுறை அரசு அதிகாரியிடம் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மூன்று மணி நேரம் வெயிலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலை மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின் பொழுது கிராம மக்கள் தெரிவிக்கையில் சர்வந்தாங்கல் கிராம பகுதியில் சுடுகாட்டு சாலை மற்றும் ஏரி நீரோடை கால்வாய் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் இச்சம்பவம் குறித்து துறைகள் சார்ந்த அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடுமையாக குற்றம் சாட்டினர்.

 

 

மேலும் இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சர்வந்தாங்கல் கிராம பொதுமக்கள் ஆற்காடு -கலவை செல்லும் சாலையை 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சாலையை மறித்து சுமார் மூன்று மணி நேரமாக கடுமையான முறையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்தவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இந்த கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார் ,ஆற்காடு வட்டாட்சியர் வசந்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் கோரிக்கை மீதான விசாரணை செய்து உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கிராம பொதுமக்களால் கைவிடப்பட்டது.

 

 

மேலும் பொதுமக்கள் தெரிவித்த புகார் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கோட்டாட்சியர் வினோத்குமார் நேரடியாக சென்று பார்வையிட்டு கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு ஆய்வினை மேற்கொண்டார்.

மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

 

CATEGORIES
TAGS