ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் இருக்கும் அகரம் ஏரியை தூர்வார வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலவை தாசில்தார் மதிவாணன், தலைமை தாங்கினார்.
தலைமையிடத்து துணை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் தீனா, வரவேற்றார். இதில், பேரூராட்சி, தீயணைப்புத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலவை நூல் நிலையம் இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
உயிர் சேதம் ஏற்படும் முன்பு இடம் மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும், அல்லாளச்சேரி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் நெல் மூட்டைகளை எடை போட எடை தராசு இல்லாமல் எடைப்படாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அப்போது அதிமுக நகர செயலாளர் சதீஷ், மற்றும் விவசாயிகள் கலவை அகரம் ஏரியில் சுமார் 81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் உள்ளதால் அதில் மழைநீர் சேகரிக்க முடியாமல் உபரணியாக வெளியே செல்கிறது. ஏரியை தூர்வாரி மழைநீர் சேகரித்து விவசாயத்துக்கு பயனடைய செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் விவசாயிகள் கேட்டனர்.
இதில், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மதன் பாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் ராதிகா, சப் இன்ஸ்பெக்டர் மதியழகன், தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட தலைவர் கிட்டு, அதிமுக நகர செயலாளர் சதீஷ், ஏரி நீர்ப்பாசன பொறுப்பாளர் சத்யானந்தம், ஒன்றிய விவசாய தலைவர் ஏகாம்பரம் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.