ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த ராணுவ வீரனின் மரணம் செய்தி பெரும் சோகத்தில் மூழ்கிய கிராமம்.
தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவரது மகன் யோகேஷ் குமார் பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தார்.
தகவல் அறிந்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது மூணாண்டி பட்டி கிராமம்.
இங்கு வசித்து வருபவர் ஜெயராஜ் ரத்தினம் தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
மகன் யோகேஷ் குமார் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ மையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு யோகேஷ் குமார் உடைய பெற்றோருக்கு ராணுவ மையத்திலிருந்து லோகேஷ் குமார் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்து விட்டதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து யோகேஷ் குமார் உடைய பெற்றோர்களும் உடன்பிறந்த சகோதரிகளும் ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான மூணாண்டிப்பட்டிக்கு கொண்டு வரப்படும் என்று பெற்றோர்களும் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
ராணுவ முகாமில் மரணம் அடைந்த யோகேஷ் குமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்த பின்னர் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஊர் பொதுமக்கள்வருத்தத்துடன் கூறினர்.
ராணுவத்தில் இருந்த யோகேஷ் குமாருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் இவர் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரனின் மரணம் செய்தி இப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.