BREAKING NEWS

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

 

கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், 200 க்கும்
மேற்பட்ட மாணவ,மாணவிகள்
இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

 

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு
கல்வி அவசியம் குறித்தும்,
மேலும் இந்த குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தும்,
பதாகைகள் ஏந்தியும்,
கோஷங்கள் எழுப்பியும்,இந்த பேரணி நடைபெற்றது.

 

பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி செங்கப்படை கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக
சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கமுதி வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் ஜெகன்நாதன் சந்தானகுமார், சிறப்பு ஆசிரியர்கள் முத்திருளாண்டி, ராமச்சந்திரன்,

 

பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ், துணைத் தலைமையாசிரியர் லட்சுமணன்,மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ரமேஷ் ,பிரபு, சரண்யா,ஜெரோம்யா, கிளமெண்ட், உடற்கல்வி ஆசிரியர் கமலஹாசன் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )