ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.

மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியிக்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வைத்தார். மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.