ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் பண மோசடி

தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை
திண்டுக்கல் டெய்சிராணி உட்பட 30 பேர் கைது
இந்திய ரிசர்வ்வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக கூறி மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்சகணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வந்தனர்
இதையடுத்து (CBCID) தமிழ்நாடு முழுவதும் 13 வழக்குகளை பதிவு செய்து 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்
இந்நிலையில் தமிழ்நாட்டில் 43 இடங்களிலும், வெளி மாநிலங்களில் 4இடங்களிலும் என மொத்தம் 47 இடங்களில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையை சேர்ந்த குழுவினர் சோதனையிட்டனர்
இதில் 5 முக்கிய குற்றவாளிகளான சென்னை சுவாமிநாதன், காட்பாடி ஜெயராஜ், புதுக்கோட்டை ரவிச்சந்திரன், மணப்பாறை ஞானப்பிரகாசம், திண்டுக்கல் டெய்சி ராணி ஆகிய 5 குற்றவாளிகள் உட்பட 30 பேரை சி.பி.சி.ஜ.டி போலீசார் கைது செய்தனர்
