BREAKING NEWS

ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், ஆய்வு

ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம்,தெரிவித்ததாவது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கிராமங்களின் வளர்ச்சிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகளும்,

வாணாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.21 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார் குளம் புனரமைப்புப் பணிகளும், வாணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமையல் கூடம் புனரமைப்புப் பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20.79 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிட சுடுகாடு சுற்றுச்சுவர் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.

 

தொடர்ந்து அத்தியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளும், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.34 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிட பணிகளும், இப்பள்ளியிலேயே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிட பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பின்னர் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,

மூரார்பாளையம் கிராமத்தில் பாலாஜி நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.57 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையுடன் கூடிய வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூரார்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணிகளும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் புனரமைப்புப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முடிவுற்ற அனைத்துப் பணிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதர பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ,செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இவ்வாய்வின் போது ரிஷிவந்தியம் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS