BREAKING NEWS

ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

 

இதில் மாநிலங்களவை எம்பி கல்யாண சுந்தரம் தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருப்பனந்தாள் ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை பெருந்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தொடர்ந்து அருகே இருந்த வகுப்பறையில் பாடங்கள் கற்றுக் கொண்டிருந்த மாணவர்களிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார் மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும் அங்கிருந்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

பள்ளிக்கு புதிய சாலை ஏற்படுத்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி.

அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலை சேரும் சகதியுமாக காட்சியளித்துவருகிறது இதற்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என இப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் இன்று நடந்த புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வருகை தந்தனர்.

 

சேரும் சகதியமான சாலையின் மீது தற்காலிகமாக சாக்குபடுதாக்களை கொண்டு மூடி சரி செய்திருந்தனர் இதனை அடுத்து சாலை சேரும் சகதியும் ஆக உள்ளதை சரி செய்யும் விதத்தில் உடனடியாக புதிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுருத்தினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )