ரேசன்கடைகளில் இருமுறை கைரேகை பதிவு பெறும் நடைமுறையை அரசு ரத்து செய்யவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளில் ரேசன் பொருள்கள் வாங்க குடும்ப அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு பெறப்பட்டு அத்யாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருள்கள் வாங்குவதற்கு ரேசன்கடையில் கைரேகை பதிவு செய்யும் போது பல நேரங்களில் வயதான முதிவர்கள், பெண்கள் உள்பட பலரது கைரேகை பதிவு எளிதில் ஸ்கேன் ஆகுவதில்லை அதனால் பல முறை திரும்ப திரும்ப ரேகை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
சில நேங்களில் ரேகை பதிவாகமால் பொருள்கள் வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்படுவதுண்டு இந்த நிலையில் தற்போது ரேசன்கடையில் அரசிக்கு தனியாக ஒருமுறையும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்பட இதர பொருள்களுக்கு ஒருமுறையும் கைரேகை பதிவு பெறப்படுகிறது.
இந்த இருமுறை ரேகை பதிவு முறையால் குடும்ப அட்டை தாரர்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கைரேகை பதிவு முறைக்கு மாற்றாக எளிதில் ரேசன்பொருள் வாங்கி செல்ல மாற்றுவழி முறைகளை பின்பற்றி ரேசன்பொருள் விநியோகம் செய்ய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செய்தியாளர் எஸ்.மனோகரன்.