ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான அரிசி கலக்கப்பட்டுள்ளதாகவும், அரிசியை ஊற வைக்கும் போது அவை தனியாக மிதப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை சோதனை செய்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திட்டக்குடிபிளாஸ்டிக் அரிசிபிளாஸ்டிக் ரேஷன் அரிசிமுக்கிய செய்திகள்ரேஷன் அரிசிரேஷன் கடைரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்