ரைசிங் சிங்கர் என்ற பட்டத்தை வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தேனி மாணவர்.
போடி செய்தியாளர் மு .பிரதீப்
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அல்லா பாக்ஸ் என்னும் கூலித் தொழிலாளி இவரது மகன் சாகித் ஆஃபரித்தி இவர் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.
சாதிப்பதில் ஆர்வம் காட்டி வந்த இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற ரைசிங் சிங்கர் கேட்டகிரியில் சக்தி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் உலக சாதனை படைத்துள்ளார்.
இவரை சக்தி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் இவரது சாதனையை பதிவு செய்து கௌரவித்து பதக்கங்களும் கேடயங்களும் வழங்கியது தான் வெற்றிக்கு காரணமான கூலித் தொழிலாளியான தனது தந்தையை மேடைக்கு வரவழைத்து..
தனது வழிகாட்டியாகவும் தனது தந்தையாகவும் உற்ற தோழனாகவும் இருந்து தன்னை இந்த உலகத்திற்கு சிறந்த மாணவனாக வருவதற்கு மெழுகுவத்தி போல் செயல்பட்டு தன்னை மேடை ஏற்றிய பெருமை தனது தந்தையை சாரும் எனக் கூறி தனது தந்தையின் கையால் பதக்கத்தை அணியச் செய்து காண்போரை மெய்சிலிக்க செய்தார்.
கூலித் தொழிலாளி அல்லா பாக்ஸ் ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோர் என கெட்ட தாய் என்ற வள்ளுவனின் குரலுக்கு ஏற்ப தன் மகன் அடைந்த சாதனை தன் வாழ்நாளில் அடைந்த சாதனையாக எண்ணி மகிழ்ந்தார்.
உலக சாதனை படைத்த சாகித் அப்ரிதி தந்தையான அல்லா பாக்ஸ் இவரது சாதனையைக் கண்டு தேனி மாவட்டம் போடி மக்கள் பெருமிதம் அடைந்தும் இஸ்லாமிய மக்களுக்கு முன் உதாரணமாக திகழும் சாஹித் அப்ரிதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.