ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு.
கோவை:
எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டினார்.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி இன்டர்நேஷனல் 3000ன் மாநாடு கோவை பிஎஸ்ஜி கன்வென்ஷன் ஹாலில் கடந்த 7ம் தேதி நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் ஆளுனர் ஜெரால்டு தலைமை வகித்து மாநாட்டை நடத்தினார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் ரோட்டரி இன்டர்நேஷனல் 3000ன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரோட்டரி செயல்பாடுகளில் சிறப்பாக பணியாற்றிய ரோட்டரி இன்டர்நேஷனல் 3000ன் முன்னாள் மாவட்ட ஆளுநரும், எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er. முருகானந்தத்திற்க்கு முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு Distinguished Service Award for promoting Rotary & its Goal என்ற விருது வழங்கினார்
ரோட்டரி நன்மதிப்பை உயர்த்த சிறப்பான வகையில் பணியாற்றியதற்காக PDG Er. எம்.முருகானந்தத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.