ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்
மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 65 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை தூத்துக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு,..
திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் வழங்கி ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் (தலா ரூபாய் 9,25,633/-) மதிப்புள்ள 64,79,431/- மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி,
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார், இ.கா.ப கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர், சிப்காட், முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார்.
குண்டர் தடுப்புச் சட்டம் : (Goondas Act)
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 எதிரிகள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா வழக்குகள்: (Ganja Cases)
இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 149 வழக்குகள் பதிவு செய்து 256 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய் மற்றும் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குட்கா வழக்குகள் : (Gutkha Cases)
இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 1060 வழக்குகள் பதிவு செய்து 1132 பேர் கைது செய்யப்பட்டு,
அவர்களிடமிருந்து 9034 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனை வழக்குகள் இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3493 வழக்குகள் பதிவு செய்து 3534 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7730 லிட்டர் மதுபானம் மற்றும் 86 போதை மாத்திரைகள் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து,
ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.