BREAKING NEWS

லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை!!

லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை!!

லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை! பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அடுக்கடுக்காக புகார்கள் கொடுத்த அவலம்!!

வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட பிர்காவில் காட்பாடி, வேலூர் என இந்த தாலுகாக்களில் நில அளவையராக பணியாற்றி வருபவர் தான் இந்த பழமலை என்ற லஞ்சப் பேர்வழி.

ஏழை, எளிய மக்களிடம் எந்த ஒரு நில அளவைக்கும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கறந்து விடுகிறார். அதேபோன்று ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதும், அரசு ஊழியரின் விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களிடையே அதிகப்படியான புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த நிலையில் உள்ளது. அதாவது இடைவிடாது இந்த புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் இதுபோன்று லஞ்சம் பெறுவது சட்ட விதிமுறைக்கு மாறானது மற்றும் எதிரானதாகும் என பலமுறை எச்சரித்தும் என்னை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது என சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு அவதூறு பரப்பி வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார் இந்த ஜெகஜால கில்லாடி பழமலை.

 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நில அளவையர் பழமலை மீது லஞ்சப் புகார் குறித்து கோரிக்கை மனுவும் வழங்கியுள்ளனர் இவரால் பாதிக்கப்பட்டவர்கள்.

காட்பாடியில் பணியாற்றிய போதும் இது போன்று பொதுமக்களின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் செய்தவர்தான் இந்த ஜெகஜால கில்லாடி பழமலை என்று சொன்னால் அது மிகையாகாது.

தற்போது வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நில அளவையர் என்று சொல்லிக் கொண்டு எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அவ்வளவு பணத்தையும் வாரி குவித்து வருகிறார் இந்த பழமலை.

இதை தட்டிக் கேட்கும் செய்தியாளர்களை என்னிடம் மாதாமாதம் மாமூல் தர வேண்டும் என கேட்டார் அந்த செய்தியாளர் என்று அந்த குறிப்பிட்ட செய்தியாளர் மீது அவதூறு பரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரான பழமலை. ஒரு செய்தியாளர் மீது இப்படி மிரட்டி பணம் கேட்டார் என்பதை தவிர வேறு எந்த புகாரையும் கூற முடியாது.

அதையேதான் இந்த பழமலையும் செய்துள்ளார் இந்த விஷயத்தில் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பழமலைக்கு அள்ளகைகளாக வேலூரைச் சேர்ந்த செய்தியை ஒழுங்காக எழுதத் தெரியாத ஒரு செய்தியாளர் அதுவும் நான் ‘சீனியர் ரிப்போர்ட்டர்” என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நபரும், அதே போன்று ஒரு மாத இதழின் மாவட்ட செய்தியாளர் என்று சொல்லிக் கொண்டு மூன்றெழுத்து அடைமொழியில் அழைக்கப்படும் ஒரு டுபாக்கூர் செய்தியாளரும் இவருக்கு பக்கபலமாக செயல்படுகின்றனர்.

அவர்களுக்கு இந்த பழமலை மாதா மாதம் மாமூல் செலுத்துகிறார் என்பது வெட்கக்கேடான விஷயம் ஆகும். பொதுமக்களிடம் முறைகேடாக வசூல் செய்வதை தட்டிக்கேட்பவர் செய்தியாளராகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொதுமக்களில் ஒருவருக்கும், தனி மனிதனுக்கும் அதிகாரம் உண்டு என்பதை அறியாத இந்த அறிவிலிதான் நில அளவையர் பழமலை. இவர் இது தொடர்பாகவும் தான் சிக்கிக் கொள்ளாமல் இருக்க குறிப்பாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லலாம்.  அந்த சட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாவதை தவிர்த்துக் கொள்ள தான் ஒரு உத்தமன் என்பதை உலகுக்கு காட்ட ஒரு ஆடியோவை வெளியிட்டு இவர் தன்னை உத்தமபுத்திரன் என்று உலகுக்கு காட்டியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல.

இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. இவரது முகத்திரையை கிழித்து பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான்

உண்மையான செய்தியாளர்களின் தலையாய கடமையாகும். அதை செய்வதற்கு தடையாக இருக்கிறார் இந்த பழமலையும், அவருக்கு துணையாக உள்ள அல்லக்கை நிருபர்களும் என்று சொன்னால் அதுதான் நேரடியாக சொன்னால் உண்மை திருடனுக்கு துணை போவது என்று சொல்வார்கள்.

அதுபோல வேலூரில் பொதுமக்களை கசக்கி பிழியும் அதிகாரிக்கு துணை போகும் டுபாக்கூர் நிருபர்களை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தாலே போதும், நிலைமை சீராகிவிடும்.

செய்தியாளர்களை மிரட்டிப் பார்க்கும் நபர்களுக்கு யாரும் துணை போக மாட்டார்கள் என்பதை அறியாத இந்த அறிவிலிகள் பழமலை போன்ற நாகப்பாம்பிற்கு பால்வார்க்கின்றனர் என்று சொல்லலாம். இப்படி மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பதை விடுத்து உண்மையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? என்பதை பற்றி விரிவாக விசாரணை நடத்தினால் உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

அத்துடன் அந்த டுபாக்கூர் நிருபர் மற்றும் பழமலை பேசிய ஆடியோவில், நான் குடும்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்லப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என்ன, மாநில காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு சென்றாலும் உண்மை எங்கிருக்கிறதோ அங்குதான் நியாயம் கிடைக்கும், நீதி கிடைக்கும், நேர்மையாக பணிபுரிந்ததற்கு ஆதாரமும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இவர் ஏதோ தான் யாரிடமும் மிரட்டி பணம் வாங்கவில்லை. நான் அரசு பணியை மட்டுமே செய்து கொண்டு அரசு தரும் சம்பளத்தை மட்டுமே வாங்கிச் செல்வதாக கூற வருவது எவ்வகையில் உண்மை என்பது விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை ஒருநாள் வெளிவரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆக மொத்தத்தில் இது போன்ற வருவாய் துறையில் உள்ள லஞ்சப் பேர்வழிகளை கண்டறிந்து வருவாய்த்துறை ரீதியான நடவடிக்கையை விசாரணையை துரிதப்படுத்தினால் இவர் சட்டத்தின் முன் சிக்கி சின்னா பின்னமாவது உறுதி.

ஆக மொத்தத்தில் பழமலை பஞ்சாமிர்தம் ஆகும் காலம் நெருங்கி வருகிறது கனிந்து வருகிறது என்றே சொல்லலாம். காலம் கனியட்டும், நீதி வெல்லட்டும், உண்மை ஒருபோதும் மறையாது மாறாது என்பதற்கு பழமலையின் பொய் பிரச்சாரம் எடுபடாமல் போகும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இல்லை. விரைந்து இவர் மீது ஒரு விசாரணையை துறை ரீதியாக நடத்தினால் அதில் உள்ள உண்மை தன்மை வெளிவரும் என்பதை அடித்துக் கூறலாம்.

ஆக மொத்தத்தில் ஒரு செய்தியாளரை இன்னொரு செய்தியாளரை வைத்து மிரட்ட பார்ப்பது எவ்வகையில் எடுபடும் என்பது போகப் போக தெரியும்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS