லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.

ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டாராம். பின்னர் இரவு வீட்டின் மேல் மாடியில் படுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலையில் இவரை தேடிய போது வீட்டில் கழிவறையில் தூக்கிட்டபடி சடலமாக தொங்கினார். உடனடியாக விநாயகத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல் துறை குறித்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
மேலும் விநாயகத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.