லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!! இளைஞர் துடிதுடித்து பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!

எடப்பாடி அருகே கரும்பு லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 27) இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், வெள்ளரி வெள்ளியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த கரும்பு லாரி மீது இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் மோதியுள்ளார் இளைஞர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கரும்பு லாரியில் மோதி தூக்கி வீசபட்ட மணிகண்டன் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்த எடப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.