ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த
கலிக்கநாயக்கன்பட்டி 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவரது மகன் முருகசாமி பழனியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருகிறார்.
தொடர்ந்து சக்தி கல்யாண மண்டபம் அருகே முருகசாமி மற்றும் அவரது நண்பர் தினேஷ் குமார் ஆகிய இருவரும் ஆட்டோவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று இரண்டு நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
முருகவேல்சாமி தாக்குதலில் ஈடுபட்ட சக்திவேல், சுப்புராஜ் என்பவர்களை பார்த்து ஏன் என்னை தாக்குகிரீர்கள் என்று கேட்டதற்கு முருகசாமியை சாதியின் பெயரைச் சொல்லி இரும்பு கம்பியால் மீண்டும் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து உடலில் பல்வேறு காயங்களுடன் முருகசாமி சிகிச்சைக்காக
பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாக்குதளுக்கு உட்பட்ட முருகசாமியிடம் நகர் காவல் துறையினர் வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு சென்ற நிலையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை என்றும் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையினரால்
பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தர்மராஜ் இளம்புலிகள் மாவட்ட செயலாளர் இரணியன் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் வள்ளுவன் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் உடனடியாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்று தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி வருகின்றனர்