BREAKING NEWS

வடக்குபுதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மரம் நடுவிழா

வடக்குபுதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மரம் நடுவிழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 1612வது மரம் நடுவிழா நடைபெற்றது.

விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரிராஜ் தலைமை வகித்தார். புரவலர் டிடிவி பிரேம்குமார், சின்னச்சாமி, டாக்டர் ஐவன் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆறுமுகம் உறுதிமொழி வாசித்தார். முத்து ஆடியோஸ் காளிராஜ் பனை விதைகளை வழங்கினார்.

வடக்கு புதூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் சண்முகவடிவு, உறுப்பினர்கள் சண்முகத்தாய் பழனி, சண்முகத்தாய் ராஜா ஆகியோர் மரங்களை நட்டினர்.

இதில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் மாரியப்பன், அப்பகுதி மக்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS