BREAKING NEWS

வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது.

வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (26) என்பவருக்கும், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15.04.2023 அன்று ஆனந்தராஜ் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த சந்திரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரனின் நண்பர்களான பொன்ராஜ் மகன் ராஜா செல்வின் (22), சங்கர் மகன் சக்திவேல் (20) மற்றும் சிலர் சேர்ந்து ஆனந்தராஜை வழிமறித்து அவரிடம் தவறாக பேசி இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதுகுறித்து ஆனந்தராஜ் நேற்று (16.04.2023) அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து எதிரிகளான சந்திரன், ராஜா செல்வின் மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சந்திரன் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும், எதிரி ராஜா செல்வின் மீது வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS