வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு காட்பாடி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களிடையே கடும் போட்டோ போட்டி நிலவ ஆரம்பித்து விட்டது.
இது தொடர்பாக விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவரும் முட்டி மோதி எந்த கிராமத்தில் நன்கு வசூல் ஆகுமோ அந்த கிராமத்தை தேர்வு செய்து, அந்த கிராமத்தில் பணி
செய்வதிலேயே குறியாக உள்ளனர்.
இதில் காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமம் முதல் இடத்தில் உள்ளது. தற்போது வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக நிவேதா குமாரி பணியாற்றி வருகிறார்.
இவர் என்றைக்கு வண்டறந்தாங்கல் கிராமத்தில் அடி எடுத்து வைத்தாரோ அன்றைக்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி அனைத்தையும் நாசப்படுத்தி அவரே ஏதாவது பணம் கையூட்டு வாங்க வேண்டும் என்றால் வெளியில் உள்ள ஜெராக்ஸ் கடை மற்றும் நடு ரோட்டில் நின்று கொண்டு மறைந்து மறைந்து ஒளிந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்.
தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதோடு நிற்காமல் இவரிடம் கிராம சிப்பந்தியாக பணிபுரிந்து வந்த லோகநாதன் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனை வளைத்து போட்டு அவரை அருகில் உள்ள கரசமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றி விட்டு தற்போது சிப்பந்தியே இல்லாமல் தான் மட்டுமே கல்லாகட்டி செழிப்புடன் வாழ்ந்து வருகிறார் இந்த நடமாடும் நகை கடன் நிவேதா குமாரி.
இவர் ஏதாவது புகாரை சொன்னால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியமும் தெம்புமூட்டுகிறார் வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இந்நிலையில் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிவதற்கும், அந்த இடத்தை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டோ போட்டி நிலவுகிறது.
குறிப்பாக காட்பாடி வட்ட தலைவராக உள்ள கழிஞ்சூரில் பணியாற்றும் வெங்கடேசன் மற்றும் பிரம்மபுரத்தில் உள்ள ரேகா,
குகையநல்லூரில் உள்ள கலாவதி, கரிகிரி கிராமத்தில் உள்ள சரவணன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டோ போட்டி நிலவுகிறது. அதாவது வருமானம் உள்ள ஏரியாவில் பணியாற்றவே மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் விரும்புகின்றனர்.
தவிர வருமானம் இல்லாத கிராமங்களை இவர்கள் நாடிச் செல்வதில்லை. இதற்கு வகிக்கும் சங்க பொறுப்புகளை காரணம் காட்டி இவர்கள் விரும்பும் இடங்களை கைப்பற்றுவதில் குறியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் கேட்கும் இடங்களை கேட்பவர்களுக்கு கொடுத்துவிட்டு ஜெகதீஸ்வரன் போன்ற வட்டாட்சியர்கள் அமைதி காக்கின்றனர். இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல சங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே கேட்கும் இடம் கிடைக்கிறது. சங்கத்தில் இல்லாதவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
அவர்கள் தேர்வு செய்தது போக மீதமுள்ள இடங்களை சில பல கிராம நிர்வாக அலுவலர்கள் தலையில் கட்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றது வருவாய்த்துறை. ஆதலால் இப்படி பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து மாவட்ட நிர்வாகம் முறையான கலந்தாய்வு நடத்தி அதில் தேர்வு ஆகுபவர்கள் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என்பதே கிராம நிர்வாக அலுவலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இது நடந்தால் அனைத்தும் சாத்தியமாகும். இது நடக்காவிட்டால் மீண்டும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல ஆண்டவனாலும் வருவாய் துறையை காப்பாற்ற முடியாது. நாடு தொடர்ந்து நாசமாகி கொண்டே போகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றே சொல்லலாம்.
திமுக தலைவர் மு. க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்