BREAKING NEWS

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

வண்ணாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

179 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கோட்டாட்சியர்.

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் கோட்டாட்சியர் சி.பழனி தலைமையில் மனுநீதி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

 

இம்முகாமில் சுமார் 179 பயனாளிகளுக்கு 2312735 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

குறிப்பாக இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பித்த 30 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டாவும், பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்த 27 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் செய்தும், இணைய வழி பட்டா கேட்டு விண்ணப்பித்த 56 பேருக்கும் இணைய வழி பட்டாவும், முதியோர் மற்றும் இதர உதவி தொகை கேட்டு விண்ணப்பித்த 10 பேருக்கு உதவித்தொகையும், 

 

 

புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 12 பயனாளிகளுக்கு மின்னணு புதிய குடும்ப அட்டையும், மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழ் விண்ணப்பித்த 17 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் கோட்டாட்சியர் சி பழனி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

 

 

இந்த முகாமில் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழரசன், மாவட்ட கவுன்சிலர் நகர் சக்தி விநாயகம்,

 

சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அந்தோணி ராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சிவகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் பழனி,மாலா, வட்டார வேளாண்மை அலுவலர் சிவகாமசுந்தரி, துணை வட்டாட்சியர் மஞ்சுளா, தலைமைடத்து துணை வட்டாட்சியர் ராமர்,

 

 

ஊராட்சி மன்ற தலைவர் மூக்காயி கணேசன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS