வத்தலகுண்டு அருகே ஐந்து கோவில் மகா கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே, கே.சிங்காரக்கோட்டையில், சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீசீனிவாச பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், முனியப்ப சாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திங்கள்கிழமை மங்கல இசை, கணபதி பூஜை யாக சாலை பூஜைகளுடன், தொடங்கிய கும்பாபிஷேகம், செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பமானது. அன்று மாலை 3-ம் கால யாக பூஜை தொடங்கி, தீப ஆராதனை நடைபெற்றது.
இன்று புதன்கிழமை காலை, 4-ம் கால யாக பூஜை தொடங்கியது. காலை 8 மணிக்கு மகா தீபாரணை நடைபெற்றது. இதையடுத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கங்கை, யமுனை, நர்மதை, காவேரி மற்றும் அழகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு புனித தளங்களில் இருந்து, கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை கோபுர கலசத்தில் ஊற்றி, 7 கோவில்களுக்கும் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில், கே.சிங்காரக்கோட்டை மற்றும் இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பூசாரி முருகேசன், நாட்டாமை பொன்னையன், மணியக்காரர் நாராயணன், பெரிய தனம் ஹரி கிருஷ்ணன் விழா கமிட்டி தலைவர் முருகன் மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் சிறப்பான ஏற்பாடு செய்தனர். கும்பாபிஷேக விழாவை அடுத்து அன்னதானம் நடைபெற்றது.