வத்தலக்குண்டு அருகே சாலையை சீரமைப்பதற்காக குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்த கோரி இளைஞர்கள் திடீர் சாலை மறியல்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், தனியார் கல்குவாரியில் இருந்து அங்கு லாரியில் மணலை வந்து கொட்டினர்.
மணல் குவியல் குவியலாக அப்படியே இருப்பதால், அவ்வழியே வானங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வது சிரமமாக இருப்பதாக கூறி, அப்பகுதி இளைஞர்கள் ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக,
மணலை சமப்படுத்திவிடக்கோரி செவ்வாய்க்கிழமை மாலை ரெங்கப்பநாயக்கன்பட்டியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விருவீடு போலீசார் மற்றும் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் பிச்சை ஆகியோர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குவியலாக கொட்டப்பட்ட மணலை சமப்படுத்த வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து மணல் குவியல் பொக்லைன் மூலம் சமப்படுத்தப்பட்டு,
அதன் பிறகு இளைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால் சற்று நேரம் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.