வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
வத்தலக்குண்டு மாணவர்கள் அந்தமானில் நடந்த சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுசாதனை புரிந்துள்ளனர்
வத்தலக்குண்டு வேலன் வாழும் கலைக்கூடம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் பள்ளி தலைமை பயிற்சியாளர் சுந்தரவடிவேலன் தலைமையில் கப்பலில் அந்தமான் சென்று அந்தமான் இந்தியன் யூத் டிரேடிஷனல் அசோசியேஷன் நடத்திய இன்டர்நேஷனல டிரேடிஷனல் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் கலந்துகொண்டனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் வத்தலக்குண்டுவேலன் வாழும் கலைக்கூடம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியினர் சிலம்பம்தனித்திறன் மற்றும் தொடு முறை போட்டிகளில் 15 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவுக்குஇந்தியன் யூத் ட்ரெடிஷனல் சிலம்பம்அசோஷியேசன்தலைவர் தர்ம சாஸ்தா தலைமை வகித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்..
செயலாளர்வேல்முருகன் முன்னிலை வகித்தார். தென்காசி வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சிலம்பம் டிப்ளமோ காலேஜ்இயக்குனர் டாக்டர் திருமாறன், அந்தமான் தமிழர் சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் காளிதாஸ்,திமுக மாநில துணை அமைப்பாளர் செந்தில்குமார், இங்கிலாந்து ஆங்கில பட நடிகர் ரால்ப் ஆர்லிஸ் ,உள்பட பலர் கலந்து கொண்டு சாதனை புரிந்தமாணவர்களை வாழ்த்தி பேசினர்.
போட்டி மற்றும் விழா ஏற்பாடுகளை இந்தியன் யூத் டிரேடிஷனல் சிலம்பம் அசோசியேன் கமிட்டியின்ர் செய்திருந்தனர்