BREAKING NEWS

வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.

வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.

 

சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி..

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் க்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வேலியல் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.

 

இந்த விவகாரம் விஸ்வரூபம் ஆன நிலையில் இது தொடர்பாக மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

 

இந்த விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பாக தங்கத்தமிழ் செல்வன் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

 

இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென வனத்துறை ஒ.பி.ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பிய நிலையில் அவர் சார்பாக அவர் வழக்கறிஞர் நேரில் ஆஜரானார்.

 

இந்நிலையில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டுமென வனத்துறையினர் ஒ.பி.ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பிய நிலையில் இதனை அடுத்து இன்று தனது வழக்கறிஞர்களுடன் தேனி வனச்சரக அலுவலகத்தில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜர் ஆனார். சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒ.பி.ரவீந்திரநாத்.

 

 

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு இல்லை என நான் நம்புவதாகவும், தோட்டத்தின் உரிமையாளரான நான் சட்டப்படி நேரில் ஆஜராக வேண்டும் என்ற காரணத்தினால் நேரில் ஆஜராகி உள்ளேன் என்றும்,

 

விசாரணையின் போது தனக்குள்ள சந்தேகங்கள் பற்றி வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகவும்,

 

விசாரணைக்கு எப்போது தேவைப்பட்டாலும் நல்லபடியாக வழக்கை முடிவதற்க்கு தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )