BREAKING NEWS

வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

தஞ்சாவூர்,  குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் வன்கொடுமை நிகழ்ந்தால் அச்சமின்றி காவல் துறையை அணுகி புகார் செய்யலாம் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி.
குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கான நேர்முக விளக்க நிகழ்ச்சியில் அவர் பேசியது:

 

காவல் நிலையத்துக்கு வருவதற்கு குழந்தைகள் யாரும் அச்சப்படக் கூடாது. குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படும்போது, அவர்களுக்கு உதவி செய்வதற்குத்தான் காவல் துறையினர் உள்ளனர். குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்து கொள்ள முயன்றாலோ, தொந்தரவு செய்தாலோ காவல் துறையினரிடம் அச்சமின்றி புகார் செய்யலாம்.

குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் காவல் துறையினரை அணுகலாம். குழந்தைகளுக்கு காவல் துறையினர் நண்பர்களாக இருந்து உதவி செய்து, ஆதரவும் கொடுப்பர். மேலும், காவல் துறை தொடர்பாக எந்தச் சந்தேகம் இருந்தாலும் காவல் துறையினரை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

 

குழந்தைகளில் பலர் எதிர்காலத்தில் காவல் துறையினராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பர். அவர்களும் காவல் துறையில் சேருவதற்கு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்வது போன்ற சந்தேகங்களையும் எங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றார் காவல் கண்காணிப்பாளர். மேலும், காவல் நிலையத்தின் செயல்பாடுகள், எப்படி புகார் அளிப்பது உள்ளிட்டவை குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.என். ராஜா, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )