BREAKING NEWS

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்;  பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி செயலாளர் ராமு நாயக்கர் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட மகளிர் சங்க செயலாளர் தீபாகார்த்திகேயன் , தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் பேரூராட்சி பாமக அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலகம் வரை நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தில் 2500 கடிதம் அனுப்பினார்கள்.


தொடர்ந்து உள் ஒதுக்கீடு உடனடியாக நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் காவேரிப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகிகள் பரசுராமன், வாசுதேவன், மு. சிதம்பரம், பழனி, பூபாலன், ரவி, ஆனந்த் ,மணி, சுரேஷ் ரெய்னா, சுரேஷ் ,பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி, தினகரன், சீனு, புருஷோத்தமன், சீனு, சுரேஷ் பால்கார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேரூராட்சி அமைப்பு செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS