வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் மலை மேல் வள்ளி குகையில் ஒளிந்ததாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்நிலையில் இந்த கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆடி பரணி (15 ஆம் தேதி ) கொண்டாடப்பட்டது. 16ஆம் தேதி ஆடி கிருத்திகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஆடி பரணியை ஒட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அத்துடன் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதாவது அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் கோயில் மேலாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வள்ளிமலை கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல முருக பக்தர்கள் காவடி எடுத்து வந்து ஸ்ரீ சுப்பிரமணியரை தரிசித்ததும் குறிப்பிடத்தக்கது.