வழக்கறிஞர்கள் படுகொலை செய்யபடுவதை கண்டித்து, வேலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்
வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீதிமன்ற வளாகம் எதிரில் காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாலு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை சிறப்பு செயலாளர் கோபால கிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
இதில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் கொலை செய்வதும் தொடர்கதையாக உள்ளது எனவே வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
CATEGORIES வேலூர்
TAGS காட்பாடி நீதிமன்ற வளாகம்காட்பாடி நீதிமன்றம்காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆர்பாட்டம்வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்வேலூர்வேலூர் மாவட்டம்