வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம்,
நேற்று காலை திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.
இவர் அந்த வழக்கறிஞருடைய பெண்ணுடன் சேலத்தில் ஒரே கல்லூரியில் பயின்ற போது ஒரு தலைக்காதல் வயப்பட்டு இருந்ததாகவும் தொடர்ந்து அந்த வழக்கறிஞரின் மகளை தொந்தரவு செய்து வந்த காரணத்தால் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் அதன்பிறகு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
விடுதலையாகி வெளியே வந்தவுடன் நேரடியாக வழக்கறிஞருடைய அலுவலகத்திற்கு வந்து புகுந்து தாயையும் மகளையும் அறிவாளி கொண்டு வெட்டி இருக்கிறார்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பித்து விட்டார் .வழக்கறிஞரும் அவருடைய மகளும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பெண் வழக்கறிஞர் மேல் சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து திருப்பூர் மாநகர .காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி திருப்பூர் வடக்கு சரக உதவி ஆணையர் அணில் குமார் ஆலோசனையின் படி திருப்பூர் வடக்கு சார்பு ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் அந்த குற்றவாளியின் செல்போன் செல்லும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து கேரள மாநிலம் மலப்புரத்தில் அவரை கைது செய்துள்ளனர்.
முறையான குற்றப்பதிவேடுகள் தயார் செய்யப்பட்ட பிறகு அவர் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார் என தெரிகிறது.உடனடியாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்ட திருப்பூர் மாநகர காவல் துறையின் வரை மனதார பாராட்டுகிறோம்.
