வாணியம்பாடியில் உழவர் சந்தைக்கு சென்றவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செய்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் உட்பட 2 விவசாயிகள் நிலத்தில் விளைந்த பீர்கன்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்களை வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது,
நேதாஜி நகர் அருகே உள்ள ஜல்லி ஆலை என்ற இடத்தில் கைகளில் கட்டைகளுடன் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கட்டையால் சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த விவசாயி ரமேஷ் வாணியம்பாடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர்களுக்கு பின்னால் வந்த சக விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழிப்பறி நடந்த அரை மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் தேடி சென்று அவர்களை விரட்டி பிடித்தனர்.அப்போது அஜித்குமார், செந்தில் ஆகிய இரண்டு இளைஞர்கள் மட்டுமே கையில் சிக்கினர்.
மற்ற 2 பேர் தப்பி சென்றனர்.
பின்னர் போலிசார் அவர்களுடன் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து
2 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய 2 இளைஞர்களை தேடி வருகின்றனர்.