BREAKING NEWS

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.

அங்கு போலிசார் பணியில் இல்லாததால் பயணிகளே போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய திருப்பத்தூர், சேலம், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு செல்வதில்லை ஒரு சில பேருந்துகள் மட்டுமே செல்கின்றன.

அப்படி செல்லக்கூடிய பேருந்துகள் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலைலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றது இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் வந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்ழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் 15 நிமிடம் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவித்தது.

அங்கு போலிசார் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அங்கு பெருந்திற்காக காத்திருந்து பயணிகளே போக்குவரத்து நெரிசலை சரி செய்து பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.இது போன்ற நிகழ்வு தொடர்ந்து அங்கு ஏற்பட்டு வருகிறது.

எனவே அப்பகுதியில் போக்குவரத்து காவலர்கள் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் போக்குவரத்து நெரிசல்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன எனவே போக்குவரத்தை சீர் செய்ய நிரந்தரமாக அங்கு போக்குவரத்துக் காவலர்கள் நியமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS