வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து அவர்கள் “தினம் ஓர் திடீர்ஆய்வில்” வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள” முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு,
மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் உயிரிய வருகைப்பதிவு திட்டம் (AEBAMS) முறை, மருத்துவ மனை சுகாதாரம், மருந்துகள், நிதிநிலை பயன்பாடு, கணக்குத் தணிக்கை, புற நோயாளிகள், உள் நோயாளிகள் வருகை, CEmONC taei பிரிவு, PNC, இன்னுயிர் காப்போம் 48, டயாலிசிஸ் பிரிவு,
பல் மருத்துவ பிரிவு, சித்தா மருத்துவ பிரிவு, மகப்பேறு, மற்றும அறுவை சிகிச்சை பிரிவு,” அனைத்து இடங்களையும் பார்வையிட்டும் அதன் அனைத்து நிலைகளையும் , அனைத்து வகை பதிவேடுகளையும் மற்றும் முக்கிய அறுவை சிகிச்சை பதிவேடுகளையும் ஆய்வு செய்தும் கூட்டம் நடத்தினார்,