வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது.
இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார் அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களை பார்த்து கொள்ளளயில் ஈடுப்பட்ட மர்ம நபர் கடப்பாரையை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.
கொள்ளை முயற்சி குறித்து ஏடிஎம் முகவர் செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நேற்று மாலை ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 1.25 லட்சம் இருப்பு இருந்த நிலையில் மீண்டும் அதில் 3 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது. ஆனாலும் இயந்திரத்தின் லாக் தரமாக இருந்த காரணத்தினால் கொள்ளையன் ஏடிஎம்மில் இருந்த பணத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால் அதிலிருந்து 4.25 லட்சம் ரூபாய் பத்திரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.