BREAKING NEWS

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன் பள்ளம் ஏற்பட்டு 40 அடி ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன் பள்ளம் ஏற்பட்டு 40 அடி ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன், என்பவருக்கு சொந்தமான மலையடிவார பகுதியை ஒட்டி விவசாய விலை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

 

வழக்கம்போல இன்று காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாயி முருகேசன் சென்றுள்ளார். அப்போது, விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன் திடீரென 40 அடி ஆழம் மற்றும் 15 அகலத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டு விவசாய நிலம் உள்வாங்கியது.

 

 

அதை பார்த்த அவர் அதன் அருகே சென்றுள்ளார். அப்போது நிலத்தின் உள்ளிருந்து பெரும் சத்தத்துடன் நிலம் மேலும் உள்வாங்கியுள்ளது. இதனைக் கண்டு விவசாயி மற்றும் அங்கு விவசாய பணியில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அதிர்ச்சி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

 

 

இது குறித்து தகவல் அறிந்து ஆலங்காயம் தீயணைப்பு மீட்பு படையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாய நிலத்தில் பார்வையிட்டு விவசாய நிலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

மேலும் இது குறித்த தகவலை கனிம வளத்துறைக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் வந்து ஆய்வு செய்து நிலம் உள்வாங்கியதன் காரணம் குறித்து தெரிவித்தால் மட்டுமே விவசாயிகள் அச்சம் நீங்கும் என்று கூறப்படுகிறது.

 

CATEGORIES
TAGS