BREAKING NEWS

வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் சர்மிளா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயதை குழந்தை உத்தமன் மற்றும் 6 மாத கைக்குழந்தை ருத்ரன் ஆகியோரை அழைத்துகொண்டு ராமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய போது,

 

அரபாண்ட குப்பம் பகுதியிலுள்ள ஷர்மிலாவின் அக்கா ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உத்தமன் வீட்டின் பின்புறம் மழைநீர் தேங்கியுள்ள குழியில் தவறி விழுந்துள்ளார்.

 

 

குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து தேடிய போது மழை நீர் தேங்கிய குழியில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை மீது வைத்திருந்த அதிக பாசத்தால் ரீல்ஸ் போட்டு ஆசை ஆசையாக வளர்த்த குழந்தை உத்தமன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோக கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

CATEGORIES
TAGS