வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இதில் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள அரையின் பூட்டை உடைத்து மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த முதல் செமஸ்டர் புத்தகங்கள் மற்றும் மாணவர்கள் எழுதி ஆசிரியர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நோட்டு புத்தகங்கள் மற்றும் மாணவர்களின் ரெக்கார்ட் நோட்டுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளி அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு உள்ளே சென்று பார்த்த போது நோட்டு புத்தகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தந்து.மேலும் புத்தகங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று ஏற்கனவே இப்பள்ளியில் மின் விசிறி உள்ளிட்டவை கொள்ளை போனதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.