வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தண்ணீர் பாட்டில்,சாப்பாடு என்று பல்வேறு செலவினங்கள் உள்ளதாக கூறி மணல் கொள்ளையில் ஈடுபடும் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ராஜிவ் என்ற நபரிடம் போன் மூலமாக பணம் கேட்கும் ஆடியோ 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருப்பத்தூர் கோட்ட கலால் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த சாந்தி என்பவரை வாணியம்பாடி வட்டாட்சியராக நியமனம் செய்தும் ஆடியோ மூலம்
சர்ச்சைக்குள்ளான வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் என்பவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது போன்று நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
