வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக நேற்று இரவு நான்காம் கால யாக சாலை பூஜையில் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்தில் வைத்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, திரவ்யாஹீதீ, நாடிசந்தனம், தத்வார்சனை, ஸ்பர்சாஹூதி, ஆகியவை தொடர்ந்து அதிகாலை கோ பூஜை, நாடி சந்தனம், மகாபூர்ணஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து வேத பட்டாச்சாரியார்கள் கலசத்தை தலையில் சுமந்து ஆலயம் முழுவதும் கடம் புறப்பாடு நடைபெற்று ராஜ விமான கோபுரத்தில் கம்பீரமாக நிற்கும் ஐந்து கலச கோபத்திற்கு சிறப்பு மங்கள சிறப்பு பூஜைகள் செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்திற்கு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது…
பின்னர் ஆலயத்தின் அடிவாரத்தை கீழே இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீரை கொண்டு தெளிக்கப்பட்டது இந்த நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவில் குடிமல்லூர் கிராமம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.