BREAKING NEWS

வாலாஜாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு..

வாலாஜாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு..

வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் தமிழகமே வருங்கால..வருங்கால தமிழகமே..என கோஷங்களை எழுப்பி உற்சாக முறையில் வரவேற்பு அளித்தனர்.

சென்னை வழியாக திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வாலாஜாபேட்டை சுங்கச்சாவடிக்கு வருகை தந்த அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிரித்த முகத்துடன் தங்க ஜரிகை அவருக்கு அணிவித்து உற்சாகமாக மேடை முழுவதும் வரவேற்று சென்றார்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு செல்லும் வழி முழுவதும் திமுகவினர் வருங்கால தமிழகமே.. வருங்கால தமிழகமே.. என கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் வெள்ளத்தில் திமுகவினர் அனைவரும் சால்வை அணிவித்தும் புத்தகங்களை வழங்கியும் வரவேற்றனா் பின்னர் மேடையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை பகிா்ந்துக்கொண்டு மேடையில் கார் மூலமாக புறப்பட்டு சென்றார்..

CATEGORIES
TAGS