வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!
![வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!! வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!](https://aramseithigal.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-20-at-09.33.30-1.jpeg)
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மண்டபத்தில் தே.மு.தி.க. வின் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் வடகல் சங்கர் மற்றும் மாவட்ட பிரதிநிதி பைரோஸ் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பூட்டுத்தாக்கு நித்தியா கலந்து கொண்டு குர்ஆன் ஓதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வாலாஜா மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், சிப்காட் தியாகு, தண்டபாணி, பாருக் பாய், சாதிக் பாய், ஜெய்புதீன், விஜயகுமார், ஹரி முத்து மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முரளி, ராணிப்பேட்டை நகர செயலாளர் ராஜா ஆற்காடு நகர செயலாளர் கே.கே.பிரபு, சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன்,
அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் விநாயகம், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், கமல், ஜெய்,விஜயகுமார், சாதிக் பாஷா, அமீன் பாஷா, காவேரிப்பாக்கம் சதீஷ், அரக்கோணம் சம்சுதீன் மற்றும் ஏராளமான தே.மு.தி.கவினர் இப்தார் நோன்பு திருப்பணியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.