BREAKING NEWS

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்,..

வாழப்பாடியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம், பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு காளியம்மன் கோவில் நகர் பகுதியில் பாப்பான் ஏரி அமைந்துள்ளது இதில் வாழப்பாடி சுற்றியுள்ள இறைச்சி வியாபாரிகள் கோழி, ஆட்டு இறைச்சிகளின் கழிவுகளை பாப்பான் ஏரியில் கொட்டி விட்டு செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும் அவ்வழியாக செல்லும் மக்கள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருவதோடு இச்சம்பவம் குறித்து பலமுறை வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகளும், ஊழியர்களும் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள்.

 

வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாப்பான் ஏரியில் உள்ள கோழி இறைச்சி கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து தருமாறு நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )