வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, செல்லப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்,
இன்னிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே மது அருந்தி விட்டு மதுபோதையில் சாலையில் தள்ளாடி விழுவதும் அந்த மாணவனை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வருவதோடு மது போதையிலே பள்ளிக்கு செல்வதோடு ஆசிரியர்களிடம் தகாராறில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து அறங்கேறி வரும் நிலையில் மற்றொரு சம்பவமாக வாழப்பாடி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் மதுபோதையில் சாலையில் தள்ளாடி மட்டையாகி கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.